உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள்

 

நமது யூனியனில் 80 வயது பூர்த்தியான உறுப்பினர்களுக்கு தலா ரூபாய்.1,00,000/- (ஒரு இலட்சம்) வீதம் 2022 முதல் வருடா வருடம் நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் காசோலையாக வழங்கப்பட்டு வருகிறது.

1000 ரூபாய் ஊக்கத்தொகை நலத்திட்டங்கள்

நமது யூனியன் உறுப்பினர்களில் 70 (எழுபது) வயதிற்கு மேற்பட்டு,
நலிந்திருக்கும், மூத்த உறுப்பினர்களுக்கு ஏதாவது வகையில் உதவ
வேண்டும் என்ற நமது தலைவரின் பலநாள் ஆசை செயற்குழுவில்
தீர்மானமாக எடுத்து, நலிந்துள்ள மூத்தவர்களை அடையாளம்
கண்டு, அதில் முதல்படியாக 78 (எழுபத்தெட்டு) நபர்கள்
தேந்தெடுக்கப்பட்டார்கள். துவக்கமாக 28-08-2021
சனிக்கிழமையன்று, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 10 பேருக்கு,
தலைவரின் திருக்கரங்களால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000/-
வீதம் ஊக்கத்தொகயாக வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு, அதாவது
மீதமுள்ள 68 (அறுபத்தெட்டு) நபர்களுக்கு

 

அவர்களது வங்கி
கணக்கில் செலுத்தப்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டது. நேரில்
வந்து ஊக்கத்தொகையை பெற்றுக் கொண்டவர்கள் மிகுந்த
மகிழ்வோடு தலைவருக்கு நன்றியைத் தெரிவித்து, எளியவர்களின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்த எப்போதும் சிந்திக்கும் நம் அன்புத்
தலைவரின் தலைமையில் நமது யூனியன் வாழ்வாங்கு வாழ
வேண்டும் என்று வாழ்த்தினார்கள். தற்போது மேலும் இன்று வரை
மாதா மாதம் ஊக்கத்தொகை அவரவர் வங்கி கணக்கிற்கு
செலுத்தப்படுகிறது.

உதவி

நலத்திட்டங்கள்