06.03.2018 அன்று பதவியேற்ற புதிய நிர்வாகம், நமது உறுப்பினர்களின் நலனுக்காகவும், யூனியன் வளர்ச்சிக்காகவும் செம்மையாக பணியாற்றி வருகிறது. அவ்வாறு 2019-ஆம் ஆண்டு நமது யூனியன் உறுப்பினர் தொழில் மேம்பாட்டிற்க்காகவும் நடந்த நிகழ்வுகள்.
1. யோகா பயிற்சி – 21.06.2019
நமது உறுப்பினர்களின் உடல் மற்றும் மனநலம் சீறாக இருப்பதற்காக 21.06.2019 அன்று “யோகா” (மனவளக்கலை) பயிற்சி திரு. V.K. சுப்ரமணியம் அவர்களால் நடத்தப்பட்டது. அதில் நமது உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். இதற்கு ஏற்பாடு செய்த நமது உறுப்பினர் திரு.பிரதீப்ராஜீ (உ.எண்.2284) அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.






2. மருத்துவ பரிசோதனை – 20.07.2017 & 10.08.2019
நமது உறுப்பினர்கள் பின்னணிக் குரல் கொடுப்பதில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், அவர்களுக்குள் இருக்கும் குரல் வளத்தை, பேணி பாதுகாக்க 20.07.2019 மற்றும் 10.08.2019 திருமதி. Dr. கல்பனா (KARE DIAGNOSTICS & HEARING CENTRE) . Dr. அவர்களால் நமது யூனியன் அலுவலகத்திலும், 28.09.2019 அன்று அம்பேத்கர் சமூக நலக்கூடத்திலும் ”வாய்ஸ் ஸ்கீரீனிங் மருத்துவ பரிசோதனை ” நடத்தப்பட்டது. நமது உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். இதற்கு ஏற்பாடு செய்து வழிவகுத்த நமது தலைவர் டத்தோ திரு. ராதாரவி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.






3. நெல்லை தமிழ் பயிற்சி – 30.08.2019
உளவியல் நிபுணர் டாக்டர் திரு. விஜயகுமார் அவர்களால் 30.08.2019 அன்று “திருநெல்வேலி வழக்கு மொழி அடிப்படை பயிற்சி பட்டறை” நடத்தப்பட்டது. நமது உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். “அசுரன்” படத்தில் இதன் தேவையின் முக்கியத்துவம் இருந்ததை நம் கவனத்திற்கு கொண்டுவந்து இதற்கு உந்துதலாக இருந்த நமது செயற்குழு உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான திருமதி. K. விஜயலட்சுமி (உ.எண்.743) அவர்களுக்கு நன்றிகளும், பாராட்டுதலும் தெரிவித்துக்கொள்கிறோம்.






4. ஆங்கில பயிற்சி – 14.09.2019
திரைப்படங்களில் ஆங்கிலம் மொழி மற்றும் உச்சரிப்பில் நமது உறுப்பினர்களின் திறன் மேம்பட வேண்டும் என்ற அக்கறையில் நமது யூனியன் உறுப்பினர்களுக்காக “ஆங்கில பயிற்சி” 14.09.2019 அன்று Mr. INSPIRING ELANGO அவர்களால் நடத்தப்பட்டது. நமது உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.






5. ஹிந்தி பயிற்சி :
- First Batch 05.08.2019 to 30.08.2019
- Second Batch 05.09.2019 to 27.09.2019
- Advanced Hindi Class 10.10.2019 to 16.10.2019
திரைப்படங்களில் ஹிந்தி மொழியில் பேச நமது உறுப்பினர்களின் திறன் மேம்பட வேண்டும் என்று தலைவரின் அறிவுறுத்தலின்படி திரு ஜோதிராஜ் மனோகர் அவர்களால் ஹிந்தி மொழியில் பேச பயிற்சி அளிக்கப்பட்டது. நமது உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். ”ஆங்கில பயிற்சி”. “திருநெல்வேலி பயிற்சி பட்டறை”. “ஹிந்தி மொழி பயிற்சி” ஆகியவற்றை நடத்தியதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த நமது உறுப்பினர் திரு. K.தங்கமணி பிரபு (உ.எண்.1584) அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.






6. கண் விழிப்புணர்வு முகாம் – 16.02.2019
நமது யூனியன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து 16.02.2019 அன்று, சாலிகிராமத்தில் அமைந்துள்ள சமூதாய நலக்கூடத்தில் நமது உறுப்பினர்களுக்காக இலவச கண் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதற்கு ஏற்பாடு செய்த உபதலைவர் திரு. நாராயணபாபு (உ.எண்.549) அவர்களும், அவரின் மகளும், நமது உறுப்பினருமான திருமதி. M.ஸ்வாதி (உஎண்.1223) அவர்களும் நமக்கு உறுதுணையாக இருந்து அதை செயல்படுத்தினர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.






7. மகளிர் முகாம் – 30.03.2019
SUNRAYS மருத்துவமனை மூலம் திருமதி. Dr. வனிதா அவர்களால் நமது அலுவலகத்தில் 30.03.2019 அன்று மகளிர் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் நமது உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். இதற்கு ஏற்பாடு செய்த செயற்குழு உறுப்பினர் திருமதி. A. ஷாஜிதா (உ.எண்.1638) அவர்களுக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
8. அக்குபிரஷர் – 10.03.2019
யூனியன் உறுப்பினர்களின் நலனுக்காக 10.03.2019 அன்று INVENTOR PROF Dr. (A.G. COSMIC CLINIC & RESEARCH INSTITUTE) அவர்களால் இலவச தொடு சிகிச்சை முகாம் (அக்குபிரஷர்), நமது யூனியன் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதற்கு ஏற்பாடு செய்த நமது உறுப்பினர் திரு. E.S.சண்முகநாதன் (உ.எண்.484) மற்றும் திரு. N.சதீஷ்குமார் (எ.எண்.2017) அவர்களுக்கும் நன்றியையைத் தெரிவித்துக்கொள்கிறோம்.







Leave a Reply