15.02.2020 அன்று 2020-2022 – ஆம் ஆண்டிற்கான சங்கத் தேர்தல் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. V.S.ரவி அவர்கள் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதில், போட்டியின்றி தலைவராக டத்தோ திரு. ராதாரவி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலான வாக்கு வித்தியாசத்தில் டத்தோ திரு. ராதாரவி அவர்களின் அணி மாபெரும் வெற்றி பெற்றது.
25.02.2020 தேதியன்று நமது யூனியன் அலுவலகத்தில் சம்மேளன நிர்வாகிகள் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. 2020-2022-ஆம் ஆண்டு தேர்தலில் பொருளாளராக வெற்றிபெற்ற A.ஸ்ரீனிவாசமூர்த்தி அவர்கள் தமிழ், தெலுங்கு மற்றும் மளைய புத்தாண்டை முன்னிட்டு 14.03.2020 அன்று அவர் தனிப்பட்ட முறை உறுப்பினர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கினார். அவர்களுக்கு யூனி சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆனால், கொரோனா பேரிடர் காரணமாக நமது யூனியன் அலுவலகம் 22-ம் தேதி முதல் ஜீன் மாதம் வரை விடுமுறை விடப்பட்டது.
- கொரோனா பேரிடர் காலத்தில் உறுப்பினர்களுக்கு நிவாரண உதவியாக சம்மேளனம் 1300 நபருக்கு (25கி) அரிசி மூட்டைகள் மற்றும் ஒருவருக்கு தலா ரூ500/- வீதம் மொத்தம் ரூ.6,50,000/- வழங்கியது. அதை நமது உறுப்பினர்கள் யூனியன் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொண்டார்கள். யூனியனுக்கு வந்து பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு, யூனியன் மூலம் ஏற்பாடு செய்த வாடகை வண்டியின் மூலம் அரிசி மூட்டையும், 500/-ரூபாயும் அவர்களது இல்லங்களுக்கு சென்று சேர்க்கப்பட்டது.
- நமது சம்மேளத்தின் மூலம் கொரோனா பேரிடர் நிவாரணமாக நடிகர் திரு.அமிதாப்பச்சன் மற்றும் கல்யாண் ஜிவல்லர்ஸுடன் இணைந்து ரூ.1,500/- மதிப்புள்ள மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பிக் பஜார் கூப்பன்களை சம்மேளனத்திற்கு வழங்கினார்கள். சம்மேளனம் நமது யூனியனுக்கு வழங்கிய 1100 கூப்பன்கள் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
- அதேபோல், நடிகரும், நமது உறுப்பினருமான திரு. சூர்யா அவர்களும் கொரோனா நிவாரண நிதி சம்மேளனத்திற்கு வழங்கினார். சம்மேளனம் மூலம் நமக்கு 1582 உறுப்பினர்களுக்கு தலா. ரூ.400/- வீதம், 6.32,800-ரூபாயை நமது யூனியன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதை ரூ. 400/- வீதம் நமது உறுப்பினர்களின் அவரவர் வங்கி கணக்கில் நாம் செலுத்தினோம்.
- நமது யூனியன் உறுப்பினர்கள் சில பேர் நமது சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அரிசி மூட்டையாகவும், ரொக்கமாகவும் யூனி நன்கொடை வழங்கியுள்ளார்கள். அவர்களின் விபரங்கள்.

Leave a Reply