சம்மேளனத்தில் 14.02.2021 அன்று தேர்நல் நடைபெற்றது. நடைபெற்ற தேர்தலில், சம்மேளன அமைப்பில் உள்ள 13 பதவிகளுக்கு போட்டியின்றி அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர். நமது யூனியன் பொருளாளர் திரு. A ஸ்ரீனிவாசமூர்த்தி அவர்கள் இணைச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
சம்மேளனத்தின் வாயிலாக பூமிகா அறக்கட்டளை சார்பாக திரு மணிரத்னம் மற்றும் திரு ஜெயந்திரா அவர்கள் ஐந்து மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்க்காக தலா ரூ.1500/-மதிப்பிலான. ICICI வங்கி அட்டையானது கொடுக்கப்பட்டது. அதன்படி, மளிகை பொருட்கள் வாங்குவதற்ககாக விண்ணப்பித்தவர்களுக்கு, முதல் தவணையாக (27-03-2021) எட்டு உறுப்பினர்களுக்கு, பிரசாத் லேப-ல் சம்மேளன தலைவர் திரு. R.K. செல்வமணி அவர்களால் ICICI கார்டு வழங்கப்பட்டது அதன் பின்பு. ICICI கார்டு வாங்க விண்ணப்பித்த உறுப்பினர்களுக்கு, மியூசிக் யூனியனில் மளிகை பொருட்கள் வாங்குவதற்க்குண்டான கார்டு வழங்கப்பட்டது. பூமிகா அறக்கட்டளை மூலமாக வழங்கிய ICICI கார்டில் ஐந்து மாதங்கள் மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தனர். பின்பு ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உறுப்பினர்கள் பயனடையும் வகையில் திரு. மணிரத்னம் மற்றும் திரு ஜெயந்திரா அவர்களும் அறிவித்திருந்தனர்.
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள அரசாங்கம் வழங்கும் தடுப்பூசிகளான “கோவேக்சின்” “கோவிஷீலடு” தடுப்பூசிகள் அனைவரும் போட்டுக் கொள்ளும் வகையில் நமது உறுப்பினர்களுக்காக சலுகை அறிவிக்கப்பட்டது அதன்படி இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டு அந்த தடுப்பூசி சான்றிதழை எடுத்து வந்து நமது யூனியனில் காண்பித்து, தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஊக்கத்தொகையாக ரூ. 100/- (நூறு) வழங்கப்பட்டது.
கொரோனா நோய் (இரண்டாம் அலை) பரவல் அதிகரித்ததின் காரணமாக நமது சங்க அலுவலகம் 28-04-2021 முதல் காலை 10.00 மணிமுதல் மதியம் 02.00 மணி வரை செயல்பட்டது. மேலும், கொரோனா பரவல் அதிகரித்ததால தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், நமது யூனியன் அலுவலகம் 10-05-2021 முதல் 13-06-2021 வரை விடுமுறை அளிக்கப்பட்டது கொரோனா நோய் (இரண்டாம் அலை) தொற்று பரவல் குறைவு காரணமாக தமிழக அரசு ஊரடங்கு தளர்த்தியது அதன்பின் அலுவலகம் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது.
நமது யூனியன் அலுவலகத்தின் தரைத்தளத்திற்கு மறைந்த நமது உபதலைவர் திரு. ஆர்.வீரமணி அவர்களின் பெயர் வைக்கலாம் என்று நமது தலைவர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, அதன்படி மறைந்த நமது உபதலைவர் திரு. ஆர்.வீரமணி அவர்களின் பெயர் பெயர்சூட்டப்பட்டு, (கலைமாமணி, கலைச்செல்வம் திரு. ஆர்.வீரமணி தளம் ) நமது தலைவர் டத்தோ உயர்திரு.ராதாரவி அவர்களின் திருக்கரங்களால் 28-08-2021 சனிக்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் திரு. ஆர்.வீரமணி அவர்களின் மனைவி மற்றும் மகள்கள் கலந்து கொண்டனர். மறைந்த திரு, ஆர்.வீரமணி அவர்களின் மனைவியார் பேசுகையில், “தனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருப்பதாகவும், என்றுமே நமது யூனியனையும், நமது அண்ணனையும் இரு கண்களாக” எனது கணவர் பாவித்தார். மேலும், தனது கணவருக்கு இந்த மரியாதை அளித்திருப்பது மிக்க மகிழ்ச்சியாகவும். நெகிழ்ச்சியாகவும் உள்ளதாக கூறினார்.
தலைவர் அவர்கள் பேசும்போது “யூனியனுக்காக மிகவும் பாடுபட்டு உழைத்தார் திரு ஆர்.வீரமணி என்றும், மேலும் தனக்கு வலதுகரம் போன்று செயல்பட்டவர் என்றும், பின்னணி குரல் ஒருங்கிணைப்பாளர்களுக்காக சலுகை கிடைக்க பரிந்துரைத்தவர்” என புகழ்ந்தார். மேலும், திரு ஆர்.வீரமணி அவர்களின் ஆன்மா என்றும் நம் யூனியனை சுற்றித்தான் இருக்கும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நமது யூனியன் உறுப்பினர்களில் 70 (எழுபது) வயதிற்கு மேற்பட்டு, நலிந்திருக்கும், மூத்த உறுப்பினர்களுக்கு ஏதாவது வகையில் உதவ வேண்டும் என்ற நமது தலைவரின் பலநாள் ஆசை செயற்குழுவில் தீர்மானமாக எடுத்து, நலிந்துள்ள மூத்தவர்களை அடையாளம் கண்டு, அதில் முதல்படியாக 78 (எழுபத்தெட்டு) நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். துவக்கமாக 28-08-2021 சனிக்கிழமையன்று, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 10 பேருக்கு தலைவரின் திருக்கரங்களால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000/- வீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு, அதாவது மீதமுள்ள 68 (அறுபத்தெட்டு) நபர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டது. நேரில் வந்து ஊக்கத்தொகையை பெற்றுக் கொண்டவர்கள் மிகுந்த மகிழ்வோடு தலைவருக்கு நன்றியைத் தெரிவித்து, எளியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எப்பொதும் சிந்திக்கும் நம் அன்புத் தலைவரின் தலைமையில் நமது யூனியன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்கள். நிர்வாகிகளும் மற்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் மாதா மாதம் ஊக்கத்தொகை அவரவர் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகிறது.

Leave a Reply