நமது சங்கத்தில் 2022-2024 ஆண்டுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான தோதல் அதிகாரியாக ஓய்வுபெற்ற ”நீதியரசர் திரு. V.பெரிய கருப்பையா’ (உயர்நீதிமன்ற நீதிபதி) அவர்கள் தலைமையில் பிப்ரவரி 24-ம் தேதி. வியாழக்கிழமை (24-02-2022) அன்று விருகம்பாக்கத்தில் உள்ள A.K.R மஹாலில் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் நடந்து முடிந்த அன்றே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டன. “டத்தோ திரு.ராதாரவி ” அவர்களின் தலைமையிலான அணியை எதிர்த்து போட்டியிட்ட 11 பேரும் டெபாசிட் இழந்தார்கள். “டத்தோ திரு.ராதாரவி அவர்களின் தலைமையில் போட்டியிட்ட அனைவரும் வெற்றிபெற்றார்கள் என்று ஓய்வுபெற்ற “நீதியரசர் திரு. V.பெரிய கருப்பையா (உயர்நீதிமன்ற நீதிபதி) அவர்கள் அறிவித்தார்.
வெற்றிபெற்ற அணியின் பதவியேற்பு விழாவானது 25-02-2022 அன்று நமது சங்க அலுவலகத்தின் (இரண்டாம் தளத்தில்). நமது சம்மேளன தலைவர் திரு. R.K.செல்வமணி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சம்மேளனத்தில் இணைக்கப்பட்ட பெரும்பான்மையான யூனியனை சார்ந்த நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
நீண்டகாலமாக தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து சம்மேளனத்துடனும், தயாரிப்பாளர் சங்கத்துடனும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பலனாக நமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டது.

Leave a Reply