கடந்த 27.01.2023 அன்று நமது சங்கத்தின் பொருளாளர் திரு. A.சீனிவாசமூர்த்தி (உஎண்.744) அவர்களின் மறைவிற்கு பின்னர் 03.02.2023 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் திருமதி. A.ஷாஜிதா (உ.எண்.1638) அவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதலோடு புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டார்
- 2019 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் திரு ஹெரான் முரளி அவர்கள் சந்தா கட்ட முடியாதவர்களுக்கு உதவும் நோக்கத்தில் நன்கொடை வழங்கி வருகிறார். அந்த வகையில் 2023-ம் வருடம் ரூ.15.000/-நன்கொடையாக வழங்கினார். இதன் மூலமாக 75 பேர் பயன்பெற்றனர்.
- நம் யூனியனில் உறுப்பினராக இருந்த P.R.கண்ணன் என்பவர் நமது யூனியன் கட்டிடத்தில் விதிமீறல் உள்ளது என்று மாநகராட்சியில் 2022ம் வருடத்தில் புகார் கொடுத்து, அதன் மீதான விசாரணையில் நமது கட்டிடத்தில் எந்த ஆபத்தோ,நமது கட்டிடத்தால் சுற்றியுள்ள கட்டிடங்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் அனுமதியின்றி மேல்தளம் கட்டியதற்காக நமது கட்டிடத்தை இடித்தே தீர வேண்டும் என்று பிடிவாதமாக புகார் மேல் புகார்கள் கொடுத்தார். கட்டிய கட்டிடத்திற்கு மேல்வரி கட்டவும் தயாராக உள்ளோம் என்று மாநகராட்சியில் தெரிவித்தும், பல நிர்பந்தங்களால் வேறு வழியின்றி மாநகராட்சி அதிகாரிகள் மார்ச் 11 அன்று நமது கட்டிடத்தை பூட்டி வேதனையோடு சீல் வைத்தனர். ஆம், அன்று கூடியிருந்தவர்களில் ஒருவர் “படுபாவி… இத்தனை பேரோட பணத்தை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கட்டிடத்தை கட்டினா..சொந்த பகையாலே கட்டிடத்தை இடிக்க வைச்சிட்டானே… அவனும் இதே யூனியன் மெம்பர்தானே? தன் வீட்டையே இடிக்கணும்னு தானே எவனாவது புகார் கொடுப்பானா? வயிறெரியுதய்யா… நல்லா இருப்பானா அவன்?” என்று புலம்பியது என்றென்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.
- நமது யூனியன் நடைபெறாமல் ஸ்தம்பிக்க வேண்டும் என்ற கெட்டெண்ணத்தில் கண்ணன் கொடுத்த புகாரால் மார் 11 அன்று கட்டிடம் கட்டி சீல் வைக்கப்பட்டது. அது ஒரு சனிக்கிழமை “கட்டிடத்திற்குத்தான் சீல் வைக்க முடியும்… யூனியனுக்கு சீல் வைக்க முடியாது… உடனடியா நம்ம அலுவலகத்திற்கு இன்னொரு இடம் பாருங்க ” என்ற நம் தலைவரின் ஆணைக்கிணங்க. ஒரே நாளில் இடம் பார்த்து, திங்கட்கிழமை மார்ச் 13ம் தேதியே வளசரவாக்கம் பரஞ்சோதி தெருவில் நமது யூனியன் அலுவலகம் இயங்க ஆரம்பித்தது.
- நமது செயற்குழு உறுப்பினர் செல்வி D.பிரமிளா (உ. எண்.1105) அவர்கள், செயற்குழு உறுப்பினர் பதவியை அவர்களது சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்ததை தொடர்ந்து 25.03.2023 அன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் அவர் இடத்தில் பொதுக்குழு உறுப்பினர்களான திருமதி. எமி (உ.எண். 684) அவர்களும், திருமதி. A.ஷாஜிதா (உ. எண்.1638) அவர்கள் பொருளாளராக நியமிக்கப்பட்டதால், காலியாக இருந்த அவர் இடத்தில் திரு. N.சதீஷ்குமார் (உ.எண்.2017) ஆகியோரை செயற்குழு உறுப்பினர்களாக செயற்குழு ஒப்புதலோடு நியமிக்கப்பட்டார்கள்.
- நமது பெண் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் ஏப்ரல் 16-ம் தேதி நமது யூனியன் சார்பில் இறகு பந்து (BADMINTION) போட்டி நடத்தப்பட்டது. அதில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணி மற்றும் இசையமைப்பாளர் திரு. தீனா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். அதில் கலந்துகொண்ட சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்கள் பேசுகையில், இந்த போட்டியை பார்த்தபோது தன்னையும் மறந்து ஆட்டத்தில் லயித்துப்போனதாக கூறினார். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரும் மற்றவர்களை ஊக்குவித்ததை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதுதான் யூனியன் என்பது…ஒரு குடும்பமாக இருப்பது. இன்று நடந்த ஆட்டங்களையும், உறுப்பினர்களின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் பார்த்தபின் எங்கள் யூனியன்களிலும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளதாகவும் கூறினார். அடுத்து பேசிய இசையமைப்பாளர் மற்றும் சம்மேளனத்தின் உபதலைவர் திரு. தீனா அவர்கள் இப்படி ஒரு அறபுதமான தலைவர்தான் ஒவ்வொரு யூனியனுக்கும் தேவை என்றும் வாழ்த்திப் பேசினார். இந்த இறகு பந்து போடியில் (BAMINTON) பெண்கள் அணியாகவும் (DOUBLES), தனியாகவும் (SINGLE), ஆண்கள் அணியாகவும் (DOUBLES), தனியாகவும் (SINGLES), இருபாலரும் சேர்ந்து அணியாகவும் (MIXED DOUBLES) கலந்துகொண்டு விளையாடினார்கள்.
- 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்டதை தொடர்ந்து, 2023-ம் ஆண்டும் ‘DPL (DUBBING PREMIER LEAGUE) SICTADAU TROPHY” ஆனது 19-05-2023, 20-05-2023 மற்றும் 21-05-2023 9 அன்று கோவூரில் அமைந்துள்ள “டென் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நமது உறுப்பினர்கள் ஆறு அணிகளாக (VALIMAL-11’s, DUBBING SUPER KING (DSK), TOLLYWOOD TIGERS, AVENGERS, LEO, ALEXANDERS”) பிரிந்து விளையாடினர். இதில் சம்மேளன தலைவர் திரு. R.K.செல்வமணி, திரைப்பட இயக்குனர்களான திரு. R.V.உதயகுமார் (செயலாளர், இயக்குனர்கள் சங்கம்) மற்றும் திரு. G.மோகன் சம்மேளன செயலாளர் திரு. B.N.சுவாமிநாதன், சம்மேளன துணைத்தலைவர் திரு. தீனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். இதில் விளையாடிய “TOLLY WOOD TIGERS” அணி முதல் பரிசையும், “VALIMAL-11’s அணி இரண்டாம் பரிசையும். “LEO” அணி மூன்றாம் பரிசையும். “AVENGERS” அணி நான்காம் பரிசையும். “DUBBING SUPER KING” அணி ஐந்தாம் பரிசையும், “ALEXANDERS” அணி ஆறாவது பரிசையும் சிறப்பு விருந்தினர்களின் திருக்கரங்களா பெற்றார்கள்.
- நமது யூனியனின் 36-வது ஆண்டு பேரவைக் கூட்டம் 17-06-2023 அன்று “மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில்” நடைபெற்றது.நமது பொதுக்குழுக் கூட்டம் 17-06-2023 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 2018 முதலே ஒவ்வொரு பொதுக்குழுவையும் நடத்த தடைகோரி வழக்குப் போடுவது போலவே சென்ற ஆண்டும் வழக்குப் போட்டனர் எதிர்தரப்பினா. ஒவ்வொரு வருடம் போலவே அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நமது பொதுக்குழு 17-06-2023 அன்று வெற்றிகரமாக நடந்தது. அன்று நடந்த பேரவைக்கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பேரவைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 85 வயது பூர்த்தியானவர்கள் 6 (ஆறு) உறுப்பினர்களுக்கு தலா ரூபாய் 1.00.000/- (ஒரு இலட்சம்) வீதம் மொத்தம் ஆறு நபர்களுக்கு ரூபாய 6.00.000/- (ரூபாய் ஆறு லட்சம்) காசோலையாக பொதுக்குழுவில் வழங்கப்பட்டது.திரு நெல்லைவேணு @ வேணுகோபால் (உ.எண்:421) 85 வயது
- திரு I.பால்ராஜ் (உ.எண்:1360) 84 வயது
- திரு. காக்கரலா (உ.எண்:403) – 87 வயது
- திரு. B.H.வெங்கடேஸ்வரராவ் (உ எண்:316) 87 வயது
- திருமதி T.K.வசந்தா (உ.எண்.19) 86 வயது
- திரு. சினனி சண்முகம் @ VM சண்முகம (உ.எண்:234) 86 வயது
- நம் கட்டிடம் பூட்டப்பட்ட பிறகும் கண்ணன் என்பவர் ஓயவில்லை. நீதிமன்றத்தில் நம் தரப்பில் “கட்டிடத்தை இடித்துதான் கட்ட வேண்டும் என்றால் நாங்களே இடித்துக் கட்டிக் கொள்கிறோம்” என்று நம் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் கண்ணன் தரப்பினரோ “மாநகராட்சிதான் கட்டிடத்தை இடிக்க வேண்டும்’ என்று வாதாடினார். இறுதியில் அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்து நம் கட்டிடத்தை நாமே இடித்துக் கட்டிக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு அளித்ததைத் தொடர்ந்து, நம் கட்டிடம் ஜுன் மாதம் இடிக்கப்பட்டது.
- அதற்குப்பிறகும் கண்ணன் மற்றும் ஜேம்ஸ் என்ற உறுப்பினர்கள் இருவரும் அடங்கவில்லை. புதிய கட்டிடம் கட்ட நாம் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தோம். கண்ணன் மற்றும் ஜேம்ஸ் இருவரும் நமது புதிய கட்டிடத்திற்கு மாநகராட்சி அனுமதி தரக்கூடாது என்று வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்பிறகு நமக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
- நமது சட்டவிதிகள் திருத்தங்கள் செய்யப் போகிறோம் என்று பொதுக்குழுவில் அறிவித்திருந்தோம். அதற்கு பழைய சட்டவிதிகளில் சில விதிகள் சரியல்ல என்று ஜேம்ஸ் ராப்சன் என்ற மாஜி உறுப்பினர் வழக்கு போட்டார். அதன் அடிப்படையில் நாம் சட்டவிதிகளை திருத்த பொதுக்குழு கூட்டக்கூடாது என்றும் வழக்குப் போட்டார். தகுந்த அடிப்படைக் காரணம் இல்லையென்று அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்ட திருத்தத்திற்கான நமது பொதுக்குழு 16-09-2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. திருத்தப்பட்ட சட்டவிதிகள் தொழிலாளர் நலத்துறைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

Leave a Reply