முக்கிய நிகழ்வுகள்-2024

நமது சங்கத்தில் 2024-2026 ஆண்டுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. V. பெரியகருப்பையா (உயர்நீதிமன்ற நீதிபதி) அவர்கள் தலைமையில் மார்ச் 17-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (17-03-2024) அன்று, விருகம்பாக்கத்தில் உள்ள A.K.R. மஹாலில் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் நடந்து முடிந்த அன்றே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டன. “டத்தோ திரு. ராதாரவி” அவர்களின் தலைமையிலான அணியில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றார்கள், என்பதை தேர்தல் அதிகாரி “ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. V. பெரியகருப்பையா” (உயர்நீதிமன்ற நீதிபதி) அவர்கள் அறிவித்தார்.

யூனியன் சட்டவிதிகளின்படி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணியின் பதவியேற்பு விழாவானது 23-03-2024 அன்று விருகம்பாக்கத்தில் உள்ள A.K.R. மஹாலில் நமது சம்மேளன தலைவர் திரு. R.K. செல்வமணி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சம்மேளனத்தில் இணைக்கப்பட்ட யூனியன்களை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் நமது உறுப்பினர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

டப்பிங் பயிற்சி வகுப்பு

நமது யூனியனில், உறுப்பினர்களின் நலனுக்காக இலவசமாக ‘DUBBING TRAINING CLASSES” நடத்தலாம் என்ற தலைவரின் யோசனையை செயற்குழு உறுப்பினர்கள் வரவேற்க ஏப்ரல் 2024 முதல் டப்பிங் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ‘DUBBING TRAINING CLASSES உறுப்பினர்களுக்கு இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த வகுப்புகளில் ஏராளமான உறுப்பினர்கள் பங்கு பெற்று பயன்பெற்று வருகிறார்கள். முதல் வகுப்பை மூத்த உறுப்பினர் திருமதி, V. ஹேமமாலினி அவர்கள் நடத்தினார்கள். அதன்பின் முன் நின்று நடத்தும் நமது இணைச்செயலாளர் திரு. N. சதீஷ்குமார் (உஎண்.2017) அவர்களுக்கு நமது யூனியன் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக இந்த இலவச டப்பிங் பயிற்சி வகுப்புகளை இணைச்செயலாளர் திரு. N. சதீஷ்குமார் அவர்கள் ஒரு சேவையாக செய்கிறார் என்பதையும் இதற்காக எந்தவித கட்டணமோ பயணப்படியோ பெற்றுக் கொள்ளவில்லை என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *