
தலைவர் உரை
ஒவ்வொரு ஆண்டுக்கும் வெளியாகும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரும் ஹாலிவுட் படங்கள், மற்றும் இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றப்படும் பல நூறு படங்கள் என எண்ணற்ற திரைப்படங்களில் பணிபுரியும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குரல் கலைஞர்களின் சங்கமம் இந்த வலைத்தளம். திரைப்படங்கள் தவிர அன்றாடம் ஒளிபரப்பாகும் சுமார் 60 தொலைக்காட்சி தொடர்களிலும் தங்கள் குரல்களால் பங்கெடுப்பவர்கள் தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி பிண்ணனி குரல் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த குரல் கலைஞர்கள். கலைத்துறையில் அரும்பெரும் பங்காற்றும் குரல் கலைஞர்களின் வரலாற்றையும், இந்நாளைய செயல்பாட்டுகளையும் மற்றும் ஒவ்வொரு கலைஞரின் திறமைகளையும் இங்கே பதிவு செய்கிறோம்.
— டத்தோ ராதா ரவி

-
முக்கிய நிகழ்வுகள்-2021
சம்மேளனத்தில் 14.02.2021 அன்று தேர்நல் நடைபெற்றது. நடைபெற்ற தேர்தலில், சம்மேளன அமைப்பில் உள்ள 13 பதவிகளுக்கு போட்டியின்றி அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர். நமது யூனியன் பொருளாளர் திரு. A ஸ்ரீனிவாசமூர்த்தி அவர்கள் இணைச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சம்மேளனத்தின் வாயிலாக பூமிகா அறக்கட்டளை சார்பாக திரு மணிரத்னம் மற்றும் திரு ஜெயந்திரா அவர்கள் ஐந்து மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்க்காக தலா ரூ.1500/-மதிப்பிலான. ICICI வங்கி அட்டையானது கொடுக்கப்பட்டது. அதன்படி, மளிகை பொருட்கள் வாங்குவதற்ககாக…
-
முக்கிய நிகழ்வுகள்-2020
15.02.2020 அன்று 2020-2022 – ஆம் ஆண்டிற்கான சங்கத் தேர்தல் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. V.S.ரவி அவர்கள் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதில், போட்டியின்றி தலைவராக டத்தோ திரு. ராதாரவி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலான வாக்கு வித்தியாசத்தில் டத்தோ திரு. ராதாரவி அவர்களின் அணி மாபெரும் வெற்றி பெற்றது. 25.02.2020 தேதியன்று நமது யூனியன் அலுவலகத்தில் சம்மேளன நிர்வாகிகள் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.…
-
முக்கிய நிகழ்வுகள்-2019
06.03.2018 அன்று பதவியேற்ற புதிய நிர்வாகம், நமது உறுப்பினர்களின் நலனுக்காகவும், யூனியன் வளர்ச்சிக்காகவும் செம்மையாக பணியாற்றி வருகிறது. அவ்வாறு 2019-ஆம் ஆண்டு நமது யூனியன் உறுப்பினர் தொழில் மேம்பாட்டிற்க்காகவும் நடந்த நிகழ்வுகள். 1. யோகா பயிற்சி – 21.06.2019 நமது உறுப்பினர்களின் உடல் மற்றும் மனநலம் சீறாக இருப்பதற்காக 21.06.2019 அன்று “யோகா” (மனவளக்கலை) பயிற்சி திரு. V.K. சுப்ரமணியம் அவர்களால் நடத்தப்பட்டது. அதில் நமது உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். இதற்கு ஏற்பாடு…
I have no words to say the way you treat us. Your behavior was both so brotherly & some way more professional as well. We all felt very comfortable while in the SICTADAU studio. Thanks a lot for your valuable guidance
Gopi
Chennai, India
