தலைவர் உரை

ஒவ்வொரு ஆண்டுக்கும் வெளியாகும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரும் ஹாலிவுட் படங்கள், மற்றும் இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றப்படும் பல நூறு படங்கள் என எண்ணற்ற திரைப்படங்களில் பணிபுரியும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குரல் கலைஞர்களின் சங்கமம் இந்த வலைத்தளம். திரைப்படங்கள் தவிர அன்றாடம் ஒளிபரப்பாகும் சுமார் 60 தொலைக்காட்சி தொடர்களிலும் தங்கள் குரல்களால் பங்கெடுப்பவர்கள் தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி பிண்ணனி குரல் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த குரல் கலைஞர்கள். கலைத்துறையில் அரும்பெரும் பங்காற்றும் குரல் கலைஞர்களின் வரலாற்றையும், இந்நாளைய செயல்பாட்டுகளையும் மற்றும் ஒவ்வொரு கலைஞரின் திறமைகளையும் இங்கே பதிவு செய்கிறோம்.

— டத்தோ ராதா ரவி

  • முக்கிய நிகழ்வுகள்-2024

    நமது சங்கத்தில் 2024-2026 ஆண்டுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. V. பெரியகருப்பையா (உயர்நீதிமன்ற நீதிபதி) அவர்கள் தலைமையில் மார்ச் 17-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (17-03-2024) அன்று, விருகம்பாக்கத்தில் உள்ள A.K.R. மஹாலில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்து முடிந்த அன்றே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டன. “டத்தோ திரு. ராதாரவி” அவர்களின் தலைமையிலான அணியில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றார்கள், என்பதை தேர்தல் அதிகாரி “ஓய்வு பெற்ற…

  • முக்கிய நிகழ்வுகள்-2023

    கடந்த 27.01.2023 அன்று நமது சங்கத்தின் பொருளாளர் திரு. A.சீனிவாசமூர்த்தி (உஎண்.744) அவர்களின் மறைவிற்கு பின்னர் 03.02.2023 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் திருமதி. A.ஷாஜிதா (உ.எண்.1638) அவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதலோடு புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டார்

  • முக்கிய நிகழ்வுகள்-2022

    நமது சங்கத்தில் 2022-2024 ஆண்டுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான தோதல் அதிகாரியாக ஓய்வுபெற்ற ”நீதியரசர் திரு. V.பெரிய கருப்பையா’ (உயர்நீதிமன்ற நீதிபதி) அவர்கள் தலைமையில் பிப்ரவரி 24-ம் தேதி. வியாழக்கிழமை (24-02-2022) அன்று விருகம்பாக்கத்தில் உள்ள A.K.R மஹாலில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்து முடிந்த அன்றே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டன. “டத்தோ திரு.ராதாரவி ” அவர்களின் தலைமையிலான அணியை எதிர்த்து போட்டியிட்ட 11 பேரும் டெபாசிட் இழந்தார்கள். “டத்தோ திரு.ராதாரவி அவர்களின் தலைமையில்…

I have no words to say the way you treat us. Your behavior was both so brotherly & some way more professional as well. We all felt very comfortable while in the SICTADAU studio. Thanks a lot for your valuable guidance

Gopi

Chennai, India